கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்க கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 425 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்றையதினம் (11-08-2024) நள்ளிரவு 12.30 மணியளவில், துபாயிலிருந்து ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது.
அவ்வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கைதான மூவரையும் சட்டவிரோதமாக கொண்டு வந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரி, சோதனை நடத்தியதன் பின்னர் கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்ததோடு, கைதான மூவருக்கும் 16 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.