;
Athirady Tamil News

62 பேர்களை பலிவாங்கிய விமான விபத்து… ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய நபர்

0

வெள்ளிக்கிழமை கோர விபத்தில் சிக்கிய பிரேசில் பயணிகள் விமானத்தில் இருந்து ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பியதாக பயணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு கிண்ணம் தேநீரால்
குறித்த விமான விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை Voepass ஏர்லைன்ஸ் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் சுழன்று, தரையில் விழுந்து நொறுங்கி தீ கோளமாக மாறியது.

இதில் 58 பயணிகள் உட்பட 62 பேர்கள் உடல் கருகி பலியாகினர். இந்த நிலையில் பயணிகள் தொடர்பில் உறுதியானத் தகவலுக்காக உறவினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் ஒரு கிண்ணம் தேநீரால் உயிர் தப்பிய பயணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் Adriano Assis என்பவர் Cascavel பகுதியில் இருந்து São Paulo நகருக்கு செல்ல பகல் 11.56 மணி விமானத்திற்காக விரைந்துள்ளார்.

விமான நிலையத்தில் பகல் 9.40 மணிக்கு அவர் சென்றுள்ளார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் எவரும் அப்போது அங்கே இல்லை. காத்திருந்து பொறுமை இழந்த அசிஸ், ஒரு கிண்ணம் தேநீர் அருந்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

அத்துடன் விமான எண் 2283 தொடர்பில் புதிதாக தகவல் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் கண்காணித்து வந்தார். தேநீர் அருந்த சென்றவர், திரும்பி வரும் போது நேரம் 10.40. இதனால் உள்ளே அனுமதிக்க முடியாது என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

வேலையை எந்த சமரசமும் இன்றி
நொந்து போன அசிஸ், அந்த ஊழியர்களிடம் கெஞ்சியுள்ளார். கோபத்தில் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் கடைசி நொடியில் அவர்கள் அனுமதிக்காதது தமது உயிரை காப்பாற்றிவிட்டதாக அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊழியர்கள் தங்கள் வேலையை எந்த சமரசமும் இன்றி செய்ததால் மட்டுமே தாம் உயிர் தப்பியுள்ளதாக அசிஸ் நன்றியுடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய விமானியின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 35 வயது Danilo Santos Romano என்பவரே விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் விமானியாக செயல்பட்டுள்ளார். 2022ல் தான் Voepass ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.

சம்பவத்தன்று Cascavel பகுதியில் இருந்து Guarulhos நகருக்கு செல்லும் வழியில், 17,000 அடி உயரத்தில் வைத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அந்தரத்தில் பலமுறை சுழன்று, இறுதியில் தரையில் மோதி வெடித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.