இந்த ஆண்டில் இதுவரை நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்!
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் Athos Salomé என்ற பிரபல ஜோதிடர் இந்த ஆண்டில் இதுவரை தாம் கணித்துள்ள 6 சம்பவங்கள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024ல் உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும் என்றார் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்து சொல்ல உலகம் மொத்தம் குழப்பத்தை ஏற்படுத்திய மிகப்பெரிய மைக்ரோசாப்ட் செயலிழப்பு நடந்தது.
இதனால் மூன்று நாட்களுக்கு மேல் செய்தி ஊடக நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், பெரும் வணிக வளாகங்கள் என மொத்தமும் ஸ்தம்பித்தது.தற்போது வரையில் மைக்ரோசாப்ட் செயலிழப்பு மீளவில்லை என்றே கூறப்படுகிறது.
இவர் தான் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் முதல் முறையாக உலகை எச்சரித்தார்.எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்றும் இவர் கணித்திருந்தார்.
வாழும் நாஸ்ட்ராடாமஸ்
கத்தார் கால்பந்து உலகக் கிண்ணம் முதல் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்பதுடன், ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் கூட இவர் கணித்தது போன்றே நிறைவேறியுள்ளது.
தற்போது பாரீஸ் ஒலிம்பிக் குளறுபடிகள் உட்பட தமது மேலும் 5 கணிப்புகள் உறுதியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் தென் கொரியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மீது வடகொரியா தாக்குதல் முன்னெடுத்துள்ளதும் அவர்களின் VPN மென்பொருளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தாம் ஏற்கனவே கணித்துள்ளதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொன்று Safari, Chrome மற்றும் Firefox போன்ற இணைய உலாவிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என எச்சரித்திருந்தார். மூன்றாவதாக கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து அவர் எச்சரித்திருந்தார்.
கணிப்புகள்
சமீபத்தில் தான் இந்தியாவின் wazirx கிரிப்டோகரன்சி நிறுவனம் இணைய தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 230 மில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பை எதிர்கொண்டுள்ளது.
இதன் பின்னணியில் யார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. பாரீஸ் ஒலிம்பிக் தொடர்புடைய இணைய அமைப்புகள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இதுவென்றே Athos Salomé தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸ் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, இணைய பாதுகாப்பை பலப்படுத்தியதால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.