;
Athirady Tamil News

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு? தமிழக அரசு விளக்கம்

0

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்பட்டதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.

ஓய்வு வயது உயர்வு
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் இதனை 62ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு அரசு ஊழியர் சங்கங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர்.

அரசு விளக்கம்
இந்நிலையில், இதுதொடர்பாக அரசின் தகவல் சரி பார்ப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வதந்தியை பரப்பாதீர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.