;
Athirady Tamil News

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

0

இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்குமான போர் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

குறித்த தகவலை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் (Pentagon) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் உடனான தொலைபேசி அழைப்பொன்றில், ஆஸ்டின் இஸ்ரேலை பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பென்டகன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போர் கப்பல்
இதேவேளை, USS Abraham Lincoln Carrier Strike Group எனும் அமெரிக்க போர் கப்பல் குழுவினை F-35C ரக போர் விமானங்களுடன் மத்திய கிழக்கிற்கு (Middle East) செல்லுமாறு லாயிட் ஆஸ்டின் உத்தரதவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் தாக்குதலுக்கு முன்னதாக, மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவ சொத்துக்களை அமெரிக்கா (USA) நிலைநிறுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும். ஈரான் (Iran) மண்ணில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.