எங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது! அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ளாது – மன்னர் அப்துல்லா
அமெரிக்கா உடனான கூட்டாண்மை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில், தங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது என ஜோர்டான் மன்னர் தெரிவித்தார்.
எந்த சாராருக்கும் போர்க்களமாக இருக்காது
ஜோர்டான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கலந்துகொண்டார்.
Ammanயில் நடந்த இந்தக் கூட்டத்தில், பிராந்தியத்தில் நிலவும் நிலைமையை தணிக்கவும், முழுமையான பிராந்தியப் போரைத் தடுக்க முழுமையான அமைதியை அடையவும் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது அவர், “ஜோர்டான் எந்த சாராருக்கும் போர்க்களமாக இருக்காது. அதன் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ளாது” என்றார்.
எச்சரித்த மன்னர்
மேலும், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பயங்கரவாத குடியேற்றத் தாக்குதல்கள் மற்றும் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ புனிதத் தலங்களின் மீறல்களின் ஆபத்துக்கள் குறித்தும் மன்னர் எச்சரித்தார்.
அதேபோல் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பகுதியின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்திற்கு இரு நாடு தீர்வே அடிப்படையான ஒரே வழியாக இருக்கும்.
பரந்த அமைதி ஏற்பட வழிவகுக்கும் என அதன் முக்கியத்துவம் பற்றி மீண்டும் உறுதிப்பட அவர் கூறினார்.