பரசூட் முறை நடுகை மூலம் பயிர்செய்கை செய்யப்பட்ட வயல் அறுவடைவிழா
அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையிற்கு அமைய அசேதன விவசாய உள்ளீடுகளை குறைத்து ;சேதனஉள்ளீடுகளையும் ,காலநிலைக்கு சீரமைவான விவசாய தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தி உயர் விளைச்சலை பெறுவதற்கு விவசாயிகளை வழிப்படுத்தும் முகமாக
2024 சிறுபோக நெற் செய்கையின்
போது துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் கோட்டைகட்டிய விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.யாமினி சசீலனின் வழிகாட்டலின் கீழ் முல்லைத்தீவு விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பரசூட் நடுகைமுறைமூலம் 38 ac விஸ்தீரணத்தில் பயிர்செய்யப்பட்ட நெற்ச்செய்கையின் அறுவடை நிகழ்வும்; புதிய தொழில்நுட்ப்ப பாவனை தொடர்பான விவசாயிகளிற்கான விழிப்பூட்டல் நிகழ்வும் ; 12/08/2024 அன்று கோட்டைகட்டியகுளம் விவசாய போதனாசிரியர் க.தனுசீலன் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.யாமினி சசீலனின் தலைமையில் ; சிறப்பு விருந்தினர்களாக விவசாய மற்றும் கமநல சேவைகள் அமைச்சகம், கால்நடை பராமரிப்பு, நீர்ப்பாசனம், மீன்வளம், நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் திரு .ம.ஜெகு அவர்களும் ,காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் (CAIAP)பணிப்பாளர் திரு.A.G.C பாபு ,காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் (CAIAP)விவசாய நிபுணர் (PMU) திரு.பிறாங் ஜெயசிங்கே ,பயிர் பாதுகாப்பு பாட விதான உத்தியோகத்தர் திரு.க.லக்சிமிதரன் ,நெற்பயிருக்கான பாட விதான உத்தியோகத்தர் திரு.கோ.இளங்கீரன் ,துணுக்காய் ,மாந்தைகிழக்கு விவசாய போதனாசிரியர்களின் பங்குபற்றலுடன் அம்பலப்பெருமாள்குளத்தில் நடைபெற்றது.
இதன் போது பரசூட்முறைமூலமான விதைப்பு தொழில்நுட்பங்கள் ,இயந்திர நாற்றுநடுகை முறைமூலமான விதைப்பு தொழில்நுட்பங்கள்,நெற்செய்கையில் பயன்படும் மற்றைய தொழில்நுட்பங்கள், நடுகை முறைகளுக்கிடையிலான உற்பத்தி செலவு ; அவ் முறைகளின் நன்மைகள்,சவால்கள்,சவால்களை எதிர் கொள்வதற்கான தொழில்நுட்ப முறைகள் ,ஒப்பீடுகள் குறித்து விவசாயிகளிற்கு அறிவுறுத்தப்பட்டது.விவசாய தொழில்நுட்பங்களை வினைத்திறனாக பயன்படுத்தி இவ் வருட காலபோக வயற்செய்கையை மேற் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.