ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான முன்னாயத்தக் கலந்துரையாடல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்(12.08.2024) மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், உதவி மாவட்டச் செயலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளடங்கலாக உதவித் தெரிவாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.