இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்றறைய தினத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாகக் காட்டிக்கொண்டு வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
மோசடி செயற்பாடு
இது நடித்து மோசடி செய்யும் கும்பலின் செயற்பாடு என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, உங்கள் பேஸ்புக் பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் அல்லது செயலிழக்க செய்யப்பட்டால், பேஸ்புக் பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க அல்லது உங்கள் தகவலை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கிற்கான அணுகல் வெளி தரப்பினருக்கு அனுமதிக்கப்படும்.
முறைப்பாடுகள்
இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முறைப்பாடுகள் பெரும்பாலும் Facebook பக்கங்களை கொண்டிருக்கும் சில வணிகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
வர்த்தக முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசரபிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்துள்ளார்.