;
Athirady Tamil News

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க்

0

இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

அதிவேக இணையம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணையத்திற்கான தேசத்தின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையை Musk’s Starlink வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொழில்நுட்ப சேவை
இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த உரிமம் ஸ்டார்லிங்கை நாடு முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப சேவைகளை வழங்க உதவுகிறது.

மேலும், மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையத்திற்கான இலங்கையின் அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த உரிமம் ஆகஸ்ட் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.