;
Athirady Tamil News

வடகொரியா – ரஷ்யாவையும் மிஞ்சிய அமெரிக்காவின் பெரிய எதிரிகள்: ட்ரம்ப் வெளிப்படை

0

வடகொரியா (North Korea) மற்றும் ரஷ்யாவை (Russia) விட அமெரிக்காவுக்கு பெரிய எதிரிகள் இருந்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்குடன் (Elon Musk) எக்ஸ் (X) தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒரு மாதத்திற்கு முன்பு பென்சில்வேனியாவில் தனது பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது இடம்பெற்ற கொலை முயற்சி குறித்தும் விவரித்திருந்தார்.

இந்தியப் பாரம்பரியம்

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) போலியானவர் என்றும் “அவர் திறமையற்றவர். அவருக்கு வாக்களித்தால் அமெரிக்காவின் (USA) வணிகத்துறை இல்லாமல் போய்விடும்” என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கமலா ஹாரிஸ் எப்பொழுதும் இந்தியப் பாரம்பரியம் கொண்டவர் எனவும் தம்மை ஒரு கறுப்பினத்தவராகவே அடையாளப்படுத்த விரும்புவதாக கூறி மீண்டும் அவர் மீதான தமது இனவெறி தாக்குதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், சுமார் ஒருவடத்திற்கு பிறகு டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் தளத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.