;
Athirady Tamil News

குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கிய இளைஞர்! 10 ஆண்டுகள் கழித்து அழுகிய நிலையில் உடல் மீட்பு

0

அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் சிக்கியிருந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறித்த செய்தி வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.

3 ஆண்டுகளாக
அயோவாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று சுமார் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டில் சூப்பர் மார்க்கெட்டை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த குளிர்சாதனப் பேட்டி ஒன்றை அவர்கள் அகற்ற முயன்றபோது, அதன் பின்னால் அழுகிய நிலையில் உடல் ஒன்று இருந்துள்ளது. உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மனித உடலைக் கைப்பற்றி DNA சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

எழுந்த கேள்வி
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 2009ஆம் ஆண்டில் காணாமல்போன Larry ely murillo-moncada என்பவரின் உடல் தான் அது என தெரிய வந்தது.

மேலும், Larry குளிர்சாதனப்பெட்டிக்கு பின்னால் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் யூகித்துள்ளனர்.

ஆனாலும், Larry சிக்கியது விபத்தாக இருந்தாலும் அவர் உதவிக்கு அழைத்திருக்கக்கூடும். அது எப்படி கடைக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தவர்களுக்கு தெரியாமல் போனது? அவரின் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு விளக்கம் அளித்த பொலிஸார், Larry 12 அடி உயரம் கொண்ட அந்த பாரிய குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வந்த சத்தத்தால், அதற்கு பின்னால் இருந்து அவர் எழுப்பிய குரல் கேட்காமல் போயிருக்கும் என்றனர்.

இந்த நிலையில், Larryக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிய வைக்க கிராஃபிக்ஸ் காட்சி ஒன்றை தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதுதொடர்பான செய்தியும் பரபரப்பாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.