;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்; குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 வயது சிறுமி

0

பிரித்தானியாவில் கலவரங்களுக்கு மத்தியில் தாவரன தகவலை பரப்பி வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 13 வயது சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் அல்டர்ஷாட் நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சமீபத்தில் அங்கு ஏற்பட்ட கலவரத்தின் போது வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, சிறுமி தான் எதிர்க்கொள்ளும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதனால், சிறுமி தற்காலிக ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 29 அன்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்டில் ஒரு டேலர் ஸ்விஃப்ட் நடன வகுப்பில் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்கு பிறகு, பரவிய தவறான தகவலால் கலவரமொன்று ஏற்பட்டது.

இது பின்வரும் நாளில் சவுத்போர்டில் மற்றும் பல நகரங்களில் வன்முறையை தூண்டியது.

இந்த வழக்கு, பிரித்தானியாவில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். எனவே, சிறுமியின் தூண்டுதல் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமி நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு சிறுமியின் தண்டனை அறிவிக்கப்படும்.

மேலும், இரண்டு 12 வயது சிறுவர்கள் கடந்த வாரம் நடந்த வலதுசாரி கலவரங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பிரித்தானியா முழுவதும் வெடித்த கலவரங்களின் பின்னணியில் பல இளைஞர்கள், குறிப்பாக குறைந்த வயதான குழந்தைகள் வன்முறையில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.