;
Athirady Tamil News

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய பணத்தாள்கள்., ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனை

0

மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் தனித்துவமான அம்சம் காரணமாக ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையானது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் படத்தை கொண்டுள்ள புதிய கரன்சி நோட்டுகள் ஏலத்தில் £9,14,127-க்கு ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் நன்கொடையாக வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் £78,000 (இலங்கை ரூ.3 கோடி) ஆகும்.

இந்த நோட்டுகளின் சேகரிப்பில், ஜூன் மாதத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய £5, £10, £20 மற்றும் £50 நோட்டுகள் அடங்கும்.

இந்த ஏலத்தில் ஒரு £50 நோட்டு £26,000-க்கு விற்பனை செய்யப்பட்டது, இது இங்கிலாந்து வங்கியின் ஏலத்தில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு £10 நோட்டு, HB01 00002 என்ற தொடர்க்குறியீட்டுடன், £17,000-க்கு விற்கப்பட்டது.

இந்தப் பணம் 10 நன்கொடை நிறுவனங்களுக்கு வழங்கப்படும், இதில் Childhood Trust, Trussell Trust, Shout, Carers UK, Demelza, WWF-UK, Brain Tumour Charity, London’s Air Ambulance Charity, Child Bereavement UK, மற்றும் Samaritans ஆகியவை அடங்கும்.

இங்கிலாந்து வங்கியில் மொத்தம் 4.6 பில்லியன் நோட்டுகள் சுழற்சியில் உள்ளன, அவை சுமார் £82 பில்லியன் மதிப்புடையவை.

17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து வங்கி (Bank Of England) கரன்சி நோட்டுகளை தயாரிக்கத் தொடங்கியது.

ஆனால், 1960-ஆம் ஆண்டில் தான், மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் படத்தை கொண்ட முதல் £1 காகித நோட்டுகள் வெளியிடப்பட்டன.

பிரித்தானியாவில் பணத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது, சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட பாதி (48%) மக்கள் தங்கள் வாழ்நாளில் பணமில்லா சமூகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவந்தது.

இப்போதும், ஜூலை மாதத்தில் தபால் நிலையங்கள் £3.77 பில்லியன் பண பரிவர்த்தனைகளைச் செய்துள்ளன, இது பண பரிவர்த்தனையின் அதிகரிப்பை காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.