;
Athirady Tamil News

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆய்வில் வெளியான புதிய தகவல்

0

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள நிலத்தடி பாறைகளில் போதுமான அளவு தண்ணீர் மறைந்து கடலாக இருக்கலாம் என ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நேஷனல் ஜேர்னலில் கடந்த திங்கட்கிழமையன்று (12) வெளியிடப்பட்ட ஆய்வில் மேற்குறித்த வி்டயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் நடுவில் உள்ள சிறிய விரிசல்கள் மற்றும் பாறைகளின் துளைகளில் சிக்கி, கிரகத்தின் மேற்பரப்பில் கடல்களை நிரப்ப போதுமான தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் குழு மதிப்பிட்டுள்ளது.

நில அதிர்வுமானி
நிலத்தடி நீர் செவ்வாய் கிரகம் முழுவதையும் 1 மைல் (1.6 கிலோமீற்றர்) ஆழம் வரை உள்ளடக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2018 முதல் 2022 வரை செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை ஆய்வு செய்ய நில அதிர்வுமானியைப் பயன்படுத்திய நாசாவின் இன்சைட் லேண்டரிலிருந்து இந்தத் தரவு வெளிவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராயும் எதிர்கால விண்வெளி வீரர்கள், தண்ணீரை அணுக முயற்சித்தால், முழு சவால்களையும் சந்திக்க நேரிடும்.

ஏனெனில் அது மேற்பரப்பிற்கு அடியில் 7 முதல் 12 மைல்கள் (11.5 மற்றும் 20 கிலோமீட்டர்) வரை அமைந்துள்ளது என்று குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.