;
Athirady Tamil News

ரூ.525 கோடி மோசடி.., கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன

0

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.

தேவநாதன் யாதவ் யார்?
நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 150 ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் 5000 -க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், முதியவர்கள் உள்பட பலரும் தங்களது ஓய்வூதியத்தை முதலீடு செய்கின்றனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகளவு வட்டி கிடைப்பதாக உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினார்.

அவர்களது வட்டி மற்றும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நிதிநிறுவனம் முன்பு திரண்டு அடிக்கடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

அதன்படி நடைபெற்ற விசாரணையில் தேவநாதன் யாதவ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, அதிகமான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வந்து பணம் கேட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.