பெட்ரோல் விலையை குறைக்க முடியாது…! நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்
ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என்பது பொய்யான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
150 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கூறி வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் எரிவாயு வரிசைகள்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என சிலர் கூறினாலும் அதனை நிறைவேற்ற முடியாது என ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
அந்த தொகைக்கு எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதாகவும், எரிபொருள் எரிவாயு வரிசைகள் இல்லை எனவும், அதனை கபடமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.