ரஷ்யா இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவோம்! உக்ரைன் நிபந்தனை
போர் அமைதிக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்குள் உக்ரைனிய படைகள்
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக ரஷ்யாவின் நிலப்பரப்பிற்குள் 30 கிலோ மீட்டர் வரை உக்ரைனிய படைகள் ஊடுருவலை நடத்தியுள்ளனர்.
உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் ரஷ்ய அரசின் கவர்னர் சம்பந்தப்பட்ட பகுதியை மாகாண அவசர நிலையாகவும் அறிவித்தார்.
இரண்டாம் உலக போருக்கு பிறகு ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடந்த மிகப்பெரிய ஊடுருவலாக இது பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நிபந்தனை
இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Georgiy Tykhy தெரிவித்த தகவலில், போர் அமைதிக்கு ரஷ்யா எவ்வளவு விரைவாக சம்மதம் தெரிவிக்கிறதோ, அவ்வளவு விரைவாக ரஷ்யாவிற்குள் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.