சரமாரியாகத் தாக்கும் உக்ரைன்: சமாளிக்கமுடியமல் மீண்டும் அவசரநிலை பிறப்பித்த ரஷ்யா
உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து, ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்ததால் ரஷ்ய தரப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.
Sudzha என்னும் இடத்துக்குள் உக்ரைன் வீரர்கள் நுழைந்துள்ளதால் ரஷ்ய தரப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக Kursk பகுதி ஆளுநரான Alexei Smirnov அவசர நிலை பிறப்பித்தார்.
மீண்டும் ஒரு பகுதியில் அவரசரநிலை பிறப்பித்த ரஷ்யா
தற்போது மீண்டும் ஒரு பகுதியில் ரஷ்யா அவசர நிலை பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவின் Belgorod பகுதியில் உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனின் தாக்குதலால் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக அப்பகுதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Belgorod பகுதியில் உக்ரைன் படைகள் கடுமையாக தாக்குதல் நடத்திவருவதால், அங்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது, பதற்றம் உருவாகியுள்ளது என்று கூறியுள்ள Belgorod பகுதி ஆளுநரான Vyacheslav Gladkov, ஆகவே, இன்று முதல் அப்பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.