;
Athirady Tamil News

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய சாக்லேட்டில் போதைப்பொருள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் வழங்கிய இனிப்பு பண்டங்களில் சக்தி மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இனிப்பு சாக்லேட்டில் போதைப்பொருள்
நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பகிர்ந்தளித்த அண்ணாச்சி பழ இனிப்பு சாக்லேட்டில் பயங்கரமான மெத்தம்பேட்டமைன்(methamphetamine) என்ற போதைப்பொருள் இருப்பதாக புதன்கிழமை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதனை உடனடியாக பயன்பாட்டில் இருந்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஆக்லாந்து சிட்டி மிஷன், தாங்கள் வழங்கிய இனிப்புகளில் அதிக அளவிலான சட்டவிரோத போதை பொருட்கள் கலந்து இருப்பதை கண்டறிந்த பின்னர் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்து போதைப்பொருள் நிறுவனம், பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட மஞ்சள் நிற தாளில் சுற்றப்பட்ட வெள்ளை நிற இனிப்பு சாக்லேட்டில் மெத்தம்பேட்டமைன் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்து
நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் Sarah Helm வழங்கிய தகவலில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சாக்லேட்டில் தோராயமாக 3 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதாகவும், இது பயனர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமானது என்று தெரிவித்துள்ளார்.

இதனை உட்கொள்ளுதல் மிகவும் ஆபத்தானது மற்றும் உயிரை பறிக்க கூடியது எனவும் எச்சரித்துள்ளார். தொண்டு நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போதைப்பொருள் உள்ளடங்கிய சாக்லேட்கள் தரமாக அடைக்கப்பட்ட பைகளில் அடையாளம் தெரியாத நபரால் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

உணவு பொட்டலங்களுடன் சேர்ந்து இந்த இனிப்புகளையும் விநியோகம் செய்ததாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.