நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போட்டவருக்கு நேர்ந்த மரணம்
நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போடும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் பாய்ந்து மரணம்
இந்திய மாநிலமான தெலங்கானா, கம்மம் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவரது மனைவி துர்கா. இவர் தனது வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.
அப்போது, தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை பார்க்க வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
பின்னர் அவர் வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக தனது கைக்கு அடியில் வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட மனைவி துர்கா ஓடி வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.