;
Athirady Tamil News

இந்தியாவில் காட்டு யானைகளால் ஏற்படும் இழப்புக்களை குறைக்க தொலைபேசி செயலி அறிமுகம்

0

இந்தியாவின்(India) அசாம் மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இறப்புக்களை குறைக்கும் நோக்கில் கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹாட்டி செயலியானது(Haati app)யானைக் கூட்டத்தை அணுகும் மக்களை, அந்த வழியிலிருந்து வெளியேற உதவுகிறது.

இந்தியாவின் அதிகளவான யானைகள் வசிக்கும் இடங்களில் அஸாமும் ஒன்றாகும். அங்கு யானைகள் மற்றும் மனித இறப்புகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகின்றன.

இந்தியாவின் பல்லுயிர் அமைப்பு
யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதாலும், அவற்றின் பாரம்பரிய இயற்கை வழித்தடங்கள் கூட ஆக்கிரமிக்கப்படுவதாலும் அஸ்ஸாமில் யானைகள் ஆக்ரோசமாகி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் 2020 முதல் 2024 வரை 1,701 பேர் யானைகளால் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் அஸ்ஸாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியை இந்தியாவின் பல்லுயிர் அமைப்பான ஆரண்யக் என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது.

விலங்குகளின் தாக்குதலின் விளைவாக காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளூர் அரசாங்கத்திடம் இழப்பீடு பெற உதவும் படிவமும் இந்த செயலியில் உள்ளது.

இந்தியாவில் சுமார் 50ஆயிரம் யானைகளில் காடுகளுக்கு வெளியில் சுற்றி திரிகின்றன. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியன் குடும்பங்கள் பயிர்களை தாக்கும் யானைகளால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.