பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி!
பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பயிற்சி மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ,மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்ற பெண் மருத்துவர் கை ,கால் ,முகம் என உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தியும் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மேற்கு வங்க காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராகுல் காந்தி
முதற்கட்டமாக ,பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ,படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த சூழலில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 33 வயதான சஞ்சய்சிங் என்ற நபரை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயிற்சி மருத்துவர் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
மனிதாபிமானமற்ற செயல்களால் மருத்துவர்கள், பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன்; மருத்துவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.