தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை
ஹமாஸ் (Hamas) அமைப்பினர் குறிவைத்து காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தி 10 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா (United States), கத்தார் (Qatar) மற்றும் எகிப்து (Egypt) ஆகிய நாட்டின் அதிகாரிகளால் இஸ்ரேல் அதிகாரிகளுடன் நேற்று (15) கத்தாரில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்த நாடுகள்
இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் பங்கேற்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், கடந்த 31 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியால் போர் நிறுத்தத்திற்கான திட்டம் வெளியிடப்பட்டது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இருதரப்பிலும் உருவாக்கப்பட்ட புதிய கோரிக்கைகள் தொடர்பாக பரஸ்பரமாக குற்றம்சாட்டியதால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஈரான் (Iran) மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) இணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்த நாடுகள் குறிப்பிட்டு்ள்ளமை குறிப்பிடத்தக்கது.