ரஷ்யா-உக்ரைன் போரில் பெரும் திருப்பம்., ரஷ்ய நகரத்தை கைப்பற்றிய ஜெலன்ஸ்கி படை!
ரஷ்யா – உக்ரைன் போர் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தை சந்தித்துள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 5,000 பேர் வசிக்கின்றனர். மேற்கு சைபீரியாவின் எண்ணெய் படிவுகளில் இருந்து பாயும் குழாய்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
சட்ஜா நகரில் உக்ரைனின் இராணுவ தளபதி அலுவலகத்தை நிறுவுவதாக ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
ஜனவரி முதல் உக்ரைனில் 1,175 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது, இப்போது முதல் முறையாக உக்ரைன் கிட்டத்தட்ட 800 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார் தெரிவித்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புகளின் பின்னணியில் உக்ரைன்?
ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய்களின் வெடிப்புகளின் பின்னணியில் உக்ரேனிய படைகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த இலக்கை ஒட்டி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. இதன்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யாவை சேதப்படுத்துவதற்காக அந்த நாட்டிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்களை வெடிக்கச் செய்யுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ஒரு தொழிலதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக, மே 2022-இல் திட்டத்தை செயல்படுத்த ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்தார்.
ஆனால், இந்த விவகாரம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு தெரிய வந்ததை அடுத்து ஜெலன்ஸ்கி பின்வாங்கினார். பின்னர் செப்டம்பரில், அப்போதைய உக்ரேனிய இராணுவ அதிகாரி ஜலுஸ்னி ஒரு திட்டத்தை வகுத்து ஜெலென்ஸ்கியைப் பொருட்படுத்தாமல் பால்டிக் கடலில் குழாய்களை வெடிக்கச் செய்தார்.
இந்த தகவலை உக்ரைன் மறுத்துள்ளது. குழாய் வெடிப்புகளில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று கூறியது.