காஸாவில் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்கள், சிறுமிகள்.!
காஸாவில் அடிப்படை தேவைகள் மற்றும் சீப்பு கூட கிடைக்கவில்லை என்பாதால் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மொட்டை அடித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் போர் காஸாவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் காசாவிற்கான போக்குவரத்து முறைகளை முடக்கியதால் காசாவில் அனைத்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இங்குள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு கவலை அளிக்கிறது. குப்பை சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு முறையாக செய்யப்படுவதில்லை.
மாதவிடாய் காலத்தில் தங்களுக்கு தேவையான பொருட்கள், ஷாம்பு, சோப்பு, சீப்பு கூட வாங்க சிறுமிகள் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த சூழலில், நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள்.
காசாவில் உள்ள பெண்கள் சீப்பு கூட இல்லாவிட்டால் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்று குழந்தை மருத்துவர் டாக்டர் லோப்னா அல்-அஜிசா பரிந்துரைத்துள்ளார்.
முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தடிப்புகள் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படுவதாக அவர் கூறினார்.