காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு – கதறும் பெற்றோர்!
பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெண் மருத்துவர் கொலை
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது சம்பவ நாளில் பணியில் இருந்தவர்களிடம் அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
பெற்றோர் குற்றச்சாட்டு
தொடர்ந்து போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது உடலில் 150 மில்லி கிராம் உயிரணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால்
இந்த அளவுக்கு விந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால், தங்கள் மகள் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை என்பதை நிரூபிக்கும் இந்த ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து இதுதொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.