;
Athirady Tamil News

இலங்கையில் பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகள்! வெளியான அறிவிப்பு

0

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (15-08-2024) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளது.

 

  • பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

 

  • இதுபோன்ற தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

  • ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸ் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
  • வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அரசு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது.

 

  • வேட்பாளர்களுக்கு சமமான ஊடக பிரபல்யங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளித்து செயல்படக் கூடாது.

 

  • சமூக வலையதளங்கள் இம்முறை தீவிரமாக கண்காணிக்கப்படும்.

 

  • சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.