வரி செலுத்துவோருக்கு விரைவில் நிவாரணம்: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
வரி செலுத்துவோருக்கு வரி நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
கேகாலை (Kegalla) – ருவன்வெல்லவில் இன்று (17) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கணிசமான இன்னல்களை எதிர்கொண்டு பல தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவில் நிவாரணம்
அந்த மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சர் என்ற வகையில், சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை ஜனாதிபதி புரிந்து கொண்டுள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்து சிந்தித்து வருவதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் பொதுமக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக சர்வதே நாணய நிதியத்தின் உடனான ஒப்பந்தங்களை மதிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.