;
Athirady Tamil News

எனக்கு விளம்பரம் தேவையில்லை: ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

0

ஜனாதிபதி தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துவதற்கு எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலானது தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயலும் ஶ்ரீலங்கா (Puluwan Sri Lanka) இணக்கப்பாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள்
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாம் நாட்டை பொறுப்பேற்ற போது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு நிதி இல்லாத ஒரு நாடாக காணப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகள் இருந்தன. சிலர் கடமையைச் செய்யாமல் தப்பி ஓடிவிட்டனர்.

நாங்கள் தேசத்தை எடுத்து ஸ்திரப்படுத்தினோம். இன்று நமது வெளிநாட்டு கையிருப்பில் 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளன.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த எங்களால் முடிந்தது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.