சுற்றுலாப் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு: வடகொரியாவின் கிம் ஜோங் உன் அழைப்பு
நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க வடகொரியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையை திறக்க முடிவு
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், முதல் முறையாக வடகொரியா சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கள் எல்லையை திறக்க முடிவு செய்துள்ளது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியாவில் காத்திருப்பது என்னவோ உருளைக்கிழங்கு பண்ணை அல்லது மசகு எண்ணெய் தொழிற்சாலை ஒன்று தான்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்காக Samjiyon நகரம் தயார் படுத்தப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தலைநகர் Pyongang சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
உலகின் எந்த நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை வடகொரியா அனுமதிக்கும், ஆனால் தென் கொரிய மக்களுக்கு மட்டும் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வடகொரியாவுக்கு செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இரு நிறுவனங்கள்
ஏவுகணை சோதனை தளத்திற்கு அருகாமையில் கடற்கரை சொகுசு விடுதிகளை வடகொரியா உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, சீனாவில் செயல்பட்டுவரும் இரு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை டிசம்பர் மாதம் முதல் வடகொரியாவுக்கு அழைத்துச் செல்ல தயார் என அறிவித்துள்ளனர்.
இதுவரை வெளியான தகவல்கள் அடிப்படையில் Samjiyon நகரம் மட்டுமே சுற்றுலாவுக்கு என திறக்கப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தலைநகர் Pyongang உட்பட பல நகரங்களில் பார்வையாளர்களை அனுமதிப்பார்கள் என்றும் அதில் ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.