;
Athirady Tamil News

மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகும் உக்ரைன்: கொந்தளித்த புடினின் கூட்டாளி

0

ரஷ்யா மீதான உக்ரைனின் படையெடுப்பு என்பது உலகம் மூன்றாம் உலகப் போருக்கு நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டாளி ஒருவர் கொந்தளித்துள்ளார்.

Kursk பகுதியில்
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி புடினுக்கு கூட்டாளியுமான Mikail Sheremet என்பவரே ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் படைகள் Kursk பகுதியில் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை முன்னெடுத்தது. உக்ரைன் படைகளின் அதிரடி நடவடிக்கையால் பல மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன், சுமார் 200,000 மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நெருக்கடியும் உருவானது.

தற்போது Kursk பிராந்தியத்தில் உள்ள Sudzha நகரை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே உக்ரைனின் இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகும் என்று Mikail Sheremet கொந்தளித்துள்ளார்.

ரஷ்ய மண்ணில் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதும், பொதுமக்கள் மீதும் ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதும் ரஷ்ய மண்ணின் மீதான தாக்குதலில் வெளிநாட்டவர்கள் பங்கேற்றதற்கான மறுக்க முடியாத ஆதாரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NATO உறுப்பு நாடுகள் ஒப்புதல்
இது கண்டிப்பாக உலகப் போருக்கான ஒத்திகை என Mikail Sheremet கொந்தளித்துள்ளார். அத்துடன், ரஷ்யா மீதான தாக்குதலுக்கு NATO உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்திருக்கும் என்றே தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதனிடையே, Kursk பிராந்தியத்தில் உக்ரைன் படைகளின் முன்னேற்றம் என்பது ரஷ்யாவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், அவர்கள் திட்டமிடத் தவறியுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.