பிரித்தானியாவில் 16 வயது பள்ளி சிறுமி காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்
பிரித்தானியாவில் கடந்த ஒருவார காலமாக காணாமல் போயுள்ள பள்ளி சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காணாமல் போன பள்ளி சிறுமி
பிரித்தானியாவின் மேற்கு லோதியன்(West Lothian) வின்ச்பர்க்(Winchburgh) பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கடைசியாக கடந்த ஆகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை 14 வயது சிறுமி ஈவா பிரவுன்(Eva Brown) வெளியே சென்றுள்ளார்.
அவர் கிளாஸ்கோவில்(Glasgow) உள்ள நண்பர்கள் வீட்டில் தங்க போவதாக சென்ற நிலையில், சிறுமியை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், ஈவாவின் பாதுகாப்பு குறித்து தீவிர அக்கறை கொண்டு இருப்பதாக அதிகாரி Steven Elvin தெரிவித்துள்ளார்.
மேலும் பரந்துபட்ட தேடல் மற்றும் விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈவா பிரவுன் குறித்த தகவல் ஏதேனும் தெரியவந்தால் விரைவாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அடையாளங்கள்
சிறுமி ஈவா பிரவுன் 5 அடி 6 அங்குலம் உயரமும், ஒல்லியான உடல் அமைப்பு கொண்டு காணப்படுவார், அத்துடன் அவர் தலைமுடி நடுத்தர நீளம் கொண்ட காபி நிறத்தை கொண்டு இருக்கும்.
அவர் கடைசியாக சாம்பல் நிற மேலாடையும், சாம்பல் நிற ஜாக்கரும் அணிந்து இருந்துள்ளார், அதனுடன் கருப்பு நிற ஷூ மற்றும் பேக்பேக் அணிந்து இருந்துள்ளார்.