ரூ.16,000 போக குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்ட அமெரிக்க ஹொட்டல்.., ஆத்திரமடைந்த இந்திய யூடியூபர்
அமெரிக்க ஹொட்டலில் குடிநீருக்கு தனிக்கட்டணம் கேட்பதாக இந்திய யூடியூபர் வீடியோ பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய யூடியூபர்
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த பிரபலமான யூடியூபர் இஷான் ஷர்மா. இவர், அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது அங்கு குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று இஷான் ஷர்மா கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தரப்பில் குடிநீருக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த இஷான் ஷர்மா இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “தான் தங்கியிருந்த ஹொட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ.16,000 என்றும் ஆனால், காசு கொடுத்து தனியாகதான் குடிநீர் வாங்க வேண்டும்” என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் ஹொட்டல் நிர்வாகத்தின் மீது கடும் கண்டனம் எழுந்துள்ளது.