அடிக்கடி கோளாறு கொடுத்த ஃபிரிட்ஜ்…. வாடிக்கையாளர் செய்த செயலால் கடைக்காரர் அதிர்ச்சி!
வாணியம்பாடியில் அடிக்கடி கோளாறு கொடுப்பதாகக் கூறி ஷோரூமிற்கு தூக்கி வந்து ஃபிரிட்ஜை ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்து கொடுத்தும் மக்கர் காட்டிய ஃபிரிட்ஜ்ஜால் அரங்கேறிய பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?
ஷோரூமில் வாங்கிய பிரிட்ஜில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான நபர், பிரிட்ஜை ஷோரூமிற்கு தூக்கி வந்து வாசலில் வைத்துள்ளார். கத்தி ஆதங்கத்தை வெளிக்காட்டியவர் கையில் எடுத்து பெட்ரோலை ஊற்றி பிரிட்ஜை கொளுத்த முயன்றுள்ளார். ஷோரூமில் விற்கப்பட்ட பிரிட்ஜால் ஆட்டோ ஒட்டுநரின் நிம்மதி பறிபோனது எப்படி?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுபாஷ். இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் ஷோரூமில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, 2 வருட வாரண்டியுடன் ஒரு பிரிட்ஜ் வாங்கியுள்ளார். வாங்கியது முதலே பிரிட்ஜில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் மட்டும் 4 முறை சர்வீஸ் செண்டரில் இருந்து வந்து சரி செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பிரிஜ்ட் அடிக்கடி மர்க்கர் செய்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷ், பிரிட்ஜை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஷோரூமிற்கு தூக்கிச் சென்றார்.
2 ஆண்டுகள் கேரண்டி கொடுத்து வாங்கிய பிரிட்ஜ் ஒரு வருடத்தில் 4 முறைக்கும் மேல் கோளாறு ஆளானதாகக் கூறி ஆதங்கம் தெரிவித்தார். மனைவி தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியதாகக் கூறியவர் அடிக்கடி கோளாறுக்கு உள்ளானதால் நிம்மதியை இழந்ததாகக் கூறி ஷோரூம் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இனியும் இது சர்வீஸ் செய்ய தன்னால் முடியாது என்று கூறியவர், வேறொரு பிரிட்ஜை மாற்றி கொடுக்குமாறும் ஷோரூம் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே விரக்தி அடைந்த சுபாஷ், பிரிட்ஜ் ஷோரூம் வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொழுத்த முயன்றுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் பிரிட்ஜை அப்புறப்படுத்தி சாலையில் கொண்டு சென்று வைத்தனர். பின்னர், பிரிட்ஜை இங்கேயே வைத்துச் செல்லுங்கள், என்ன பிரச்சினை என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி ஆட்டோ ஓட்டுநரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
4 முறைக்கு மேல் சர்வீஸ் செய்து கொடுத்தும் மக்கர் காட்டிய பிரிட்ஜை பெட்ரோல் ஊற்றிக் கொழுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.