சூடுப்பிடித்துள்ள அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்: மீண்டும் கமலா ஹாரிஸை விமர்ச்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்!
மக்கள் அதிக பண வருமானமும் குறைவான வரியையும் செலுத்த வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க (USA) ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸின் கமலா ஹாரிஸின் (Kamala Harris) புதிதாக வெளியிடப்பட்ட பொருளாதாரத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அவரது பொருளாதாரத் திட்டங்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவை மோசமாக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கமலா ஹாரிஸ்
அவர் தொடரந்து தெரிவிக்கையில், “கமலா ஹாரிஸ் நான்கு வருடம் ஜனாதிபதியானால் பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட 100 மடங்கு அதிகமாகும்.
அவரது திட்டத்தின்படி, ‘சோவியத் முறை’ விலைக் கட்டுப்பாடுகளை’ நடைமுறைப்படுத்துவார். மேலும் கலிபோர்னியாவின் அதிக வரி கொள்கைகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவார்.
அமெரிக்க மக்கள்
இதனால், ஒவ்வொரு அமெரிக்கர்களும் அவர்களின் வருமானத்தின் 80% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமலா ஹாரிஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது கம்யூனிஸ விலைவரம்பினை நடைமுறைப்படுத்தினால் இதவரை இல்லாதது போல் அமெரிக்க மக்கள், பஞ்சம், பட்டினி, வறுமை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.