ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் குறையணுமா? காலையில் இதை மட்டும் சாப்பிடுங்க!
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.
அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது.
தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும். இதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால்
நமது உடலில் இருக்கும் உயிரணு சவ்வுகளில் காணப்படும் கொழுப்புதான் கொலஸ்ட்ரால்.கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய் மற்றும் இரத்த ஓட்ட அபாயத்தை அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த நட்ஸ் வகைகளை சாப்பிட்டால் போதும்.
வால்நட் இதை எல்லோரும் சாப்பிடுவது குறைவு. காரணம் இதன் சுவை தான். வால்நட் பருப்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் உள்ளன. எனவே இதை காலையில் உணவாக எடுத்துக்கொண்டால் இந்த நோய் வரும் வாய்ப்புக்கள் குறையும்.
பாதாமில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் நிறைவுறா கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. காலையில் பாதாம் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆலிவ் எண்ணெய் சமையலுக்காக பயன்படுதுகின்றனர். இதை காலை உணவு செய்ய பயன்படுத்தும் போது இந்த எண்ணெயில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் நிறைவுறா கொழுப்புகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
காலை உணவில் ஆளி விதைகளை சேர்க்கும் போது இதிலிருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கெட்ட கொழுப்பை கிட்ட கூட நெருங்க விடாது. இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலையில் உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
அதிகாலையில் டீ காப்பி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை தவிர்த்து க்ரீன் டீ குடிப்பது நன்மை தரும். க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் கேடசின் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன.
ஆகையால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் கிரீன் டீ குடிக்கவும். கிரீன் டீயை வழக்கமாக உட்கொள்வதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.