கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்
கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததால், அப்பகுதியில் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் பாதிப்பில்லை
இந்த சம்பவத்தில் ரயில்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களும் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எதனால் அந்த பாலம் நிலைகுலைந்து சரிந்தது என்பதை அறிய விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு கடந்த பாலம்
விடயம் என்னவென்றால், அந்தப் பாலம், 1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் ஆகும். நூற்றாண்டு கடந்த அந்தப் பாலம், Rainy River Rail Lift Bridge அல்லது the 5 Mile Bridge என அழைக்கப்படுகிறது.
படகுகள் வரும்போது, பாலம் திறந்து படகுகளுக்கு வழிவிடும் வகையில் அந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்தப் பாலம் நிலைகுலைந்துள்ள நிலையில், அது சரி செய்யப்பட எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை.