இது பயங்கரவாதம்… உக்ரைனுக்கு எதிராக கொந்தளித்த வடகொரியா
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்னெடுக்கும் பயங்கரவாத செயல் இது என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
அத்துடன் ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் வடகொரியா மீண்டும் அறிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவுக்குள் உக்ரைனின் இந்த அடாவடித்தனம் என்பது அமெரிக்காவின் ரஷ்யாவிற்கு எதிரான மோதல் கொள்கையின் விளைவு என்றும் வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யாவுக்குள் ஊடுருவிய உக்ரைனின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியிடம் கணக்கில்லாத ஆபத்தான ஆயுதங்களை அமெரிக்கா அள்ளிக்கொடுத்துள்ளது.
பயங்கரவாத நடவடிக்கை
ரஷ்ய மண்ணில் நுழைந்து தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் கைப்பாவை நாடான உக்ரைனை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள வடகொரியா, இது மன்னிப்பே இல்லாத பயங்கரவாத நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா உடனான நெருக்கமான உறவை பாதுகாத்துவரும் வடகொரியா, உக்ரைனுக்கு எதிராக ஆயுதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. தென் கொரியா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவும் வடகொரியாவின் செயலை கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் வடகொரியாவும் ரஷ்யாவும் இதை மறுத்துள்ளது.