எங்கள் மீதும் படையெடுக்கலாம்… உக்ரைன் குறித்து ஐரோப்பிய நாடொன்றின் ஜனாதிபதி எச்சரிக்கை
அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தங்களின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை முழு எல்லையிலும் நிலைநிறுத்தியுள்ளதாக பெலாரஸ் அறிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில்
பெலாரஸ் எல்லையில் 120,000 வீரர்களை உக்ரைன் குவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆந்த நாட்டின் ஜனாதிபதி Alexander Lukashenko, அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், தங்களின் ராணுவ வீரர்களை எல்லையில் குவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான கூட்டாளி இந்த அலெக்சாண்டர் லுகாஷென்கோ. ரஷ்யா மீதான உக்ரைனின் திடீர் ஊடுருவலை கடுமையாக விமர்சித்துள்ள லுகாஷென்கோ, உக்ரைன் முன்னெடுத்துள்ள கடுபோக்கு நடவடிக்கை எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம் என்றார்.
இதனாலையே, போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முழு எல்லையிலும் ராணுவத்தை குவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே உக்ரைன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லுகாஷென்கோ தொடர்ந்து பதற்றத்தை தூண்டி வருவதுடன், ரஷ்யாவுக்கு சாதகமாகவே அவரது செயல்பாடுகளும் இருக்கும் என்றார். மட்டுமின்றி, பெலாரஸ் – உக்ரைன் எல்லையில் புதிதாக ராணுவத்தை குவித்துள்ளதாக தகவல் ஏதும் இல்லை என்றும், வழக்கமான ராணுவ எண்ணிக்கை மட்டுமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் மீதும் படையெடுக்கும்
இதனிடையே, உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்ட ராணுவத்தின் எண்ணிக்கையை லுகாஷென்கோ வெளியிடவில்லை. 2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், பெலாரஸ் நாட்டுக்கு என 48,000 ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர். அத்துடன் 12,000 எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சர் Viktor Khrenin தெரிவிக்கையில், உக்ரைன் தங்கள் மீதும் படையெடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும், எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ தெரிவிக்கையில், எப்போதுமில்லாத அளவுக்கு தங்கள் எல்லையில் கண்ணிவெடிகளை நிரப்பியுள்ளதாகவும், எல்லை கடக்க முயன்றால், பேரழிவை உக்ரைன் படைகள் எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளார்.