அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்: இளவரசர் வில்லியம்
இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், வீடின்மை தொடர்பில் நிலவும் மோசமான நிலை குறித்து வருத்தப்பட்டிருப்பார் என்று கூறியுள்ளார் அவரது மகனான இளவரசர் வில்லியம்.
அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்
இளவரசர் வில்லியம், தன் தாயாகிய டயானா உயிருடன் இருந்திருந்தால், தனது மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார். அவர் இல்லாதது தனக்கு மிகப்பெரிய வருத்தம் என வில்லியம் அடிக்கடி கூறுவதுண்டு.
தொண்டு நிறுவனங்களில் மிகுந்த ஆர்வம் காட்டியவர் இளவரசி டயானா. தாயைப்போலவே டயானாவின் மகனான வில்லியமும் வீடின்மை தொடர்பிலான தொண்டு நிறுவனங்களில் ஆர்வம் காட்டிவருகிறார் வில்லியம்.
சிறு வயதாக இருக்கும்போதே வீடின்மைக்கான காரணம் குறித்து எனக்கு விளக்கியிருக்கிறார் என் தாய். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால், வீடின்மை குறித்த விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை அறிந்தால் அம்மா மிகவும் வருத்தப்படுவார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் வில்லியம்.
1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், வெறும் 36 வயதே இருக்கும்போது பலியாகிவிட்டார் டயானா என்பது குறிப்பிடத்தக்கது.