இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண்: உக்ரைன் தாக்குதலால் சந்தித்துவரும் கஷ்டங்கள்
ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் உக்ரைன், ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.
இந்நிலையில், உக்ரைன் தாக்குதலால் இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண் ஒருவர் சந்தித்துவரும் கஷ்டங்கள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இரண்டரை அடி உயரமே உள்ள ரஷ்யப் பெண்
ரஷ்யப் பெண்ணான போலினா (Polina), 80 சென்றிமீற்றர் அல்லது சுமார் இரண்டரையடி உயரமே கொண்டவர்.
ரஷ்யாவிலேயே சிறிய உருவம் படைத்த பெண் என கருதப்படுகிறார் போலினா.
உக்ரைன் படைகள் Sudzha நகருக்குள் நுழைந்துவிட்டதால் போலினாவுக்கு எதிர்பாராத பிரச்சினை என்று ஏற்பட்டுள்ளது.
போலினா 80 சென்றிமீற்றர் உயரமே கொண்டவர் என்பதால், அவரது உயரத்துக்கு ஏற்ப, அவர் நடமாடுவதற்கும் பிற அன்றாட வேலைகளைச் செய்வதற்கும் வசதியாக தங்கள் வீட்டில் பல மாற்றங்களைச் செய்திருந்தார் போலினாவின் தாய் Natalie.
ஆனால், உக்ரைன் படைகள் நுழைந்ததைத் தொடர்ந்து போலினாவின் சகோதரி அவரை எச்சரிக்க, தனது வீட்டை விட்டு அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுடன் வெளியேறி தன் தாயுடன் Kursk நகருக்குச் சென்றுள்ளார் போலினா.
அவரது சொந்த வீட்டில் போலினாவுக்கு வசதியாக பல மாற்றங்களைச் செய்திருந்தார் போலினாவின் தாய். ஆனால், இப்போது அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் அதுபோன்ற வசதிகள் எதுவும் இல்லாததால் அன்றாட வேலைகளைச் செய்ய கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் போலினா.
போலினா, anauxetic dysplasia என்னும் அபூர்வ மரபியல் நோயால் பாதிக்கப்பட்டவர். உலகிலேயே அவரைப்போல இந்த அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 பேர்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.