ஜனாதிபதி தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்
2024 இல் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு 109.00 (நூற்று ஒன்பது ரூபாய்) தொகையைச் செலவிட முடியும் என்ற விடயம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1,868,298,586.00 (ஒரு பில்லியன், எண்ணூற்று அறுபத்தெட்டு மில்லியன், இருநூற்று தொண்ணூற்று எட்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தி ஆறு ரூபாய்) மட்டுமே என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கை
இந்த இந்த தொகை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்பாளர்கள், தேர்தல் ஆணையகத்திடம் கோரியிருந்தனர்.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரு வாக்காளருக்கு 250 ரூபாயையும், நாமல் ராஜபக்ச வாக்காளர் ஒருவருக்கு 300 ரூபாயையும், அனுரகுமார திசாநாயக்க 200 ரூபாயையும் கோரியிருந்தனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.