;
Athirady Tamil News

வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

0

கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கல்வி பெறுமதிமிக்க இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஜனாதிபதி மாளிகை, பழைய நாடாளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, நாடாளுமன்றம் மற்றும் தாமரை கோபுரம் உட்பட கொழும்பை சுற்றியுள்ள கல்வி பெறுமதிமிக்க இடங்களுக்கு சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றின் மைல்கற்கள்

இந்த களப்பயணத்தின் போது இலங்கை வரலாற்றின் பல்வேறு மைல்கற்கள், தனித்துவமான நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை மாணவர்கள் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள தொலைதூர மாகாணங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் 160க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்களை ஒன்று திரட்டி இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அத்துடன் அரச நிர்வாகப் பொறிமுறை பற்றிய புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தலைமைத்துவப் பண்புகளை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வு , இளையோர் நாடாளுமன்ற அமர்வுகள் போன்றவற்றை விளக்கமளிக்கும் அமர்வுகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.