;
Athirady Tamil News

எந்தெந்த நாட்களில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்படும்?

0

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில் எந்த நாட்களில் கப்பல் இயக்கப்படும் என்பதை பார்க்கலாம்.

கப்பல் போக்குவரத்து
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

பின்னர், வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 16 -ம் திகதி சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

நாகையில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. நாகையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும்.

பின்னர், மறுமார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல் நாகைக்கு வந்தடையும்.

இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் மொத்தம் சாதாரண 133 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகை மற்றும் இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15 ம் திகதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கப்பல் சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.