வெள்ளரிக்காயை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்
வெள்ளரிகளை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீரால் ஆனவை. நீரேற்றத்திற்கு சிறந்த ஆதாரம் ஆகும். வெள்ளரிகளை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
வெள்ளரிகள் வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய் எடை இழப்பிற்கு சிறந்ததாகும்.
வெள்ளரிக்காய் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்டுள்ளதால், இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகின்றது.
வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. வயதானதைப் போன்ற தோல்கள் வராமல் இளமையாக வைத்திருப்பதுடன், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகின்றது.
வெள்ளரிக்காய் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகின்றது. சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கவும் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.
வெள்ளரிக்காய் நீர் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன் செரிமானத்தை அதிகரிக்கவும்,மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது.
இரவு நேரத்தில் வெள்ளரி வேண்டாம்
இரவு நேரங்களில் நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டால், அது உங்களின் தூக்கத்தையும், ஜீரணிக்கும் சக்தியையும் பாதிக்கும்.
அதனால், உறங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு முன்பாக வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது.
தூங்க செல்வதற்கு முன்பு மற்ற உணவுகளுடன் சேர்த்து வெள்ளரிக்காயை சாப்பிட்டால், ஜீரணிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.