பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் – கணித்து பிரபல ஜோசியர்!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்த தகவல்களை பிரபல ஜோசியர் ஒருவர் கணித்துள்ளார்.
பெண் மருத்துவர் கொலை
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிடர் கணிப்பு
இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார்.
தற்போது அவர் கொல்கத்தா சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள கணிப்பில், கொல்கத்தா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பற்றி பலர் என்னிடம் கேட்கிறார்கள். எத்தனை பேர் சம்பந்தப்பட்டவர்கள் என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை 8 பேர் சம்பந்தப்பட்டவர்கள்.
குற்றவாளிகள் போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்டு தாங்கள் செய்த குற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.