கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
கனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border Services Agency) தெரிவித்துள்ளது
அந்த வகையில், விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் சில தொழில்நுட்ப அமைப்புகள் சிலவற்றில் பகுதியளவில் ஏற்பட்டுள்ள செயலிழப்பே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கனடா எல்லை
இது தொடர்பில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையங்களில் தற்போது பகுதியளவு தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், சிக்கலைச் சரிசெய்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
There is currently a partial systems outage impacting airports. We are working with partners on fixing the issue. We apologize for any inconvenience this outage may cause and thank you for your patience. pic.twitter.com/3iGjNXRvGb
— Canada Border Services Agency (@CanBorder) August 20, 2024
குறிப்பாக, இதனால் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு வருந்துவதாகவும், இதனைச் சரி செய்யும் வரை பயணிகளை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்தவகையில், கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் சிலவற்றில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக, பயணிகள் வருகை தரும் போது தங்கள் சுங்க தகவல்களை நிரப்புவதற்காக பயன்படுத்தும் கியாஸ்கள் எனப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் கனேடிய எல்லை சேவை முகவர்கள் (CBSA) பயணிகளின் சுங்க தகவல்களை கைமுறையாக (manual) பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம்
இந்தநிலையில், ரொறொன்ரோ பியர்சன் (Pearson Airport Toronto) சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் சுங்கச் சாவடி 01 மற்றும் 02இல் இவ்வாறான தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயணிகள் அனைவரும் வழமையான காத்திருப்பு நேரத்தினை விட சற்று அதிகமாக காத்திருக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
அதன்படி, தொழிநுட்ப வல்லுனர்கள் குறித்த விடயம் தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த தொழிநுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என எதிர்பார்க்ப்படுகின்றது.
CBSA is experiencing a systems outage at the Primary Inspection Kiosks (PIK) in Terminals 1 and 3. You may experience longer than normal wait times at customs. @CanBorder https://t.co/Xe42qwP1ph
— Toronto Pearson (@TorontoPearson) August 20, 2024