;
Athirady Tamil News

நாடாளுமன்றம் வரை சென்ற தமிழ் எம்.பிக்களின் கைகலப்பு விவகாரம்

0

திகாம்பரம் வேலுகுமாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த (Premnath Tholawatta) கேள்வியெழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் (Palani Digambaram) மற்றும் வேலுகுமார் (Velukumar) ஆகியோர் நேற்றைய தினம் (20) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது இடை நடுவில் மோதிக் கொண்டனர்.

நேர்காணல் காணொளி
இந்தநிலையில், இது குறித்து பிரேம்நாத் தொலவத்த கருத்து தெரிவிக்கையில், “தேர்தலில் வெற்றியடைவோம் என்ற மமதையில் எதிர்க்கட்சி நடந்துகொள்ளும் அதேவேளை பொதுவெளியில் இப்படி அநாகரீகமாக நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன ?

ஜனநாயகம் கருத்துரிமை குறித்து பேசும் சஜித் இதுபற்றி கொண்டுள்ள நிலைப்பாடு என்ன ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, குறித்த நேர்காணல் காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மலையகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளின் இவ்வாறான அநாகரீகமற்ற செயற்பாடுகளானது ஒட்டு மொத்த மலையக சமூகத்தின் மீதான நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.