;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

0

ரஷ்ய(russia) தலைகர் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்ரைன்(ukraine) ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமையன்று, வான் பாதுகாப்புப் படைகள் மொஸ்கோ(moscow) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் மீது தாக்குதல் நடத்த வந்த11 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.சில கிரெம்ளினுக்கு தெற்கே 38 கிமீ (24 மைல்) தொலைவில் உள்ள பொடோல்ஸ்க் நகரத்தின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மிகப்பெரிய தாக்குதல்
“ஆளில்லா விமானங்கள்ள் மூலம் மொஸ்கோவைத் தாக்கும் மிகப்பெரிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த தாக்குதல்களில் சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில், மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

மொஸ்கோ மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் அரிதானவை. கடந்த மே 2023 இல் குறைந்தது எட்டு ஆளில்லா விமானங்கள் தாக்கியதை விடவும் இந்த தாக்குதல் முந்தைய தாக்குதலை விட மிகப் பெரிதாகும்.

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
புதனன்று நடந்த சரமாரி தாக்குதல் ரஷ்யா மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதன் வான் பாதுகாப்பு பிரிவுகள் 45 உக்ரைனிய ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் அழித்ததாகக் கூறியது.

இதேவேளை உக்ரைன் முற்றிலுமாக தோற்கடிக்கப்படும் வரை இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படாது என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும், முன்னாள் ரஷ்ய அதிபருமான டிமிட்ரி மெத்வதேவ்(Dmitry Medvedev) புதன்கிழமை(21) தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.